அம்புலன்சின் பிறப்பு

Image result for ambulance old

 1809-ல் பிரெஞ்சுக்காரர்கள் போர்க்களத்தில் காயமடைந்த போர்வீரர்களைக் குணப்படுத்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். நடக்க முடிந்தவர்கள் அல்லது ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லக்கூடியவர்களைப் போர்களத்துக்கு அருகிலேயே ஒரு கூடாரம் அமைத்து உடனடியாகச் சிகிச்சை அளித்தனர்.

    பிரெஞ்சு மொழியில், நடப்பது என்பதற்கான சொல் 'ஆம்புலேர்' (ambulare). அதற்கு இணையான ஆங்கிலச் சொல் amle, 1242-ல், 'உதவி வேண்டுவோருக்கான புகலிடம்' என்ற பொருளில் 'ஹாஸ்பிடல்' என்ற சொல் வழங்கி வந்தது. 'ஆம்புலன்ஸ்' என்பதற்கான நேரடி மொழிபெயர்ப்பு 'உதவி வேண்டுவோர் நடந்தோ, சுமக்கப்பட்டோ சென்றடையும் இடம்' என்பதாகும். 19-ம் நூற்றண்டின் இடைக்காலத்தில் கிரிமியாவில் நடைபெற்ற போரில் குதிரைகளால் இழுக்கப்பட்ட வாகனங்களில், காயமடைந்த போர்வீரர்களை முதமுறையாக மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றனர். அந்த வாகனங்கள் 'ஆம்புலன்ஸ்' என்று அழைக்கப்பட்டன.

   1600-1613-ம் ஆண்டுகளில் கனடாவின் அகேடியாவில் போர்ட் ராயல் துறைமுகத்தில் 'சிக் பே' (Sick bay) என்ற முதல் மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டது. செயின்ட் ஜுன் டீடீயு ஆர்டரை சேர்ந்த இருவர் அதை நடத்தி வந்தனர்.

Comments

Popular posts from this blog

தஞ்சாவூர் சிறப்பு

கல்லணை சிறப்பு

திருவள்ளுவர் பற்றி நாம் அறியாத உண்மைகள்..