உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக திகழ்ந்த தமிழர்கள்... மறைக்கப்பட்ட மறுபக்கம்...
இன்று நம் தலைமுறை படிக்கும் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தமிழ் செய்யுள்கள் மற்றும் இலக்கன, இலக்கியங்களில் புகுத்தி பாதுகாத்துள்ளனர். ஆனால் போலியான வரலாறு நம் தலைமுறையினர் மீது தினிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தில் அறிவியல் :
அறிவியல் என்பது தமிழர் வாழ்வில் அணு முதல் அண்டம் வரை பரவியுள்ளது. சற்றே ஆழ்ந்து கவனித்தால், நம் தமிழ் இலக்கியத்தில் ரசனை, அனுபவம், அறிவியல் இவை அனைத்தும் இருப்பதை உணரலாம். ஒளவையார் திருக்குறளின் பெருமையை கூறும்போது, "அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத் தெறித்த குறள்" என்கிறார். அணு என்பது கண்களுக்கு புலப்படாத சிறிய மூலக்கூறு என்கிறது அறிவியல். இதனை பலநூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒளவை உரைத்தது வியப்பிற்குரியது. "இடையின்றி அணுக்களெல்லாம் சுற்றுமென இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்" என்று பாரதி அணுக்களின் அசைவுகள் குறித்து வர்ணித்துள்ளார்.
Comments
Post a Comment